இந்தியா

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் : மருத்துவர்கள் மீது புகார்...

ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஹைதராபாத்தில், அறுவை சிகிச்சையின்போது பெண் ஒருவர் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நிஜாம் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகேஸ்வரி என்கிற பெண் அறுவைச் சிசிக்சை செய்து கொண்டுள்ளார். அப்போதிருந்து வலி அதிகரித்து வந்ததால், எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரின் கணவர், மருத்துவர்களின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்