இந்தியா

பீதியில் இங்கேயும் அங்கேயும் ஓட வேண்டாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

ஆக்ஸிஜன் முன்பும், இப்போதும் போதுமான அளவில் கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவதை சேமிப்பு டேங்கர்கள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் பயன்படுத்தி வருவதாகவும் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் தொடர்பான சரியான தகவலும் மிக முக்கியமானது என தெரிவித்த அவர், பீதியில் அவரவர்களுக்கு ஆக்சிஜன் தேவை என யாராவது நினைத்தால் அது சரியில்லை என மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். பீதியில் இங்கேயும் அங்கேயும் மக்கள் ஓட வேண்டாம் என்றும், பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை தொடர்பு கொண்டு வீட்டிலேயே குணமடையலாம் என ஒரு மருத்துவராக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்