இந்தியா

எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் தீபாவளி - தீபங்கள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.புராவில் தீபாவளி பண்டிகையை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

தந்தி டிவி

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்.எஸ்.புராவில் தீபாவளி பண்டிகையை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். தங்களுக்கு இரண்டு குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு குடும்பம் ஊரில் உள்ளது என்றும், மற்றொரு குடும்பம் எல்லைப் பாதுகாப்புப் படை என்றும் கூறிய வீரர்கள், தற்போது குடும்பமாக இந்த விழாவை கொண்டாடுவதாக தெரிவித்தனர். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் என எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு