இந்தியா

18 ஆண்டு கால வாழ்க்கையில் முதல் விடுமுறை : MAN Vs WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதில்

18 ஆண்டுகால வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை என Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

DISCOVERY தொலைக்காட்சியின் Man vs Wild நிகழ்ச்சி உலக புகழ்பெற்றது. காடுகளில் சிக்கி கொள்ளும் மனிதர்கள், அதன் சூழலை சமாளித்து அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில் சாகச வீரர் BEAR GRYLLS உடன் உலக தலைவர்களும் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் பிரதமர் மோடி, BEAR GRYLLS உடன் இந்திய காடுகளில் சாகச பயணம் மேற்கொண்டார். அந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய மோடி, 18 ஆண்டுகால வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை என தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் சாகசம் பயணம் மேற்கொண்ட மோடி, இயற்கை மீதான தனது ஆர்வம் குறித்தும் பேசினார். இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கையின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவதில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பியர் கிரில்ஸின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தனது பதவியை தன் தலைக்கு ஒருபோதும் கொண்டு சென்றதில்லை எனவும் தெரிவித்துள்ளார். சாகச பயணத்தின் போது, பதற்றமாக உணர்கிறீர்களா? என்ற பியர் கிரில்ஸின் கேள்விக்கு, தனது வாழ்க்கையில் பதற்றத்தை ஒருபோதும் உணர்ந்தது இல்லை எனவும் மோடி பதிலளித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்