இந்தியா

Digital Arrest | Whatsapp-ல் மிரட்டி.. முதியவரிடம் கோடிகளை அபேஸ் செய்த திருட்டு கும்பல்

Whatsapp-ல் மிரட்டி.. முதியவரிடம் கோடிகளை அபேஸ் செய்த திருட்டு கும்பல்

thanthitv

டிஜிட்டல் கைது - 78 வயது முதியவரிடம் ரூ.1.16 கோடி மோசடி மகாராஷ்டிரா மாநிலம் முழுந்த் பகுதியை சேர்ந்த 78 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மோசடி செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, முதியவரை வாட்சப் மூலம் தொடர்பு கொண்டு தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த கும்பல், முதியவரின் வங்கிக் கணக்கில் 2 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக முதியவரை கைது செய்யப்போவதாக கூறி மிரட்டியதுடன், இதனை தவிர்க்க பாதுகாப்பு தொகை என கூறி ஏமாற்றி அவரிடமிருந்து ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.. இது தொடர்பாக முதியவர் புகார் அளித்த நிலையில், அதன்பேரில் அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்