இந்தியா

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பம்பை முற்றிலும் உருக்குலைந்தது. இதன் காரணமாக, பக்தர்களின் வாகனம் நிறுத்தும் இடம் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து கேரள அரசு பேருந்து மூலம் பம்பைக்கு சென்று, சபரிமலைக்கு செல்ல வேண்டும். இதற்கிடையே, சபரிமலை வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருந்ததால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்