Sabarimala || சபரிமலையில் கூட்ட நெரிசலின்றி ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான மண்டல காலம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் 18-ம் படி ஏறி, சரண கோஷம் முழங்க ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இன்று முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சபரிமலைக்கு வருவதால் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்து வருகின்றனர். #Sabarimala #LordAyyappa #AyyappaSwamy #thanthitv