இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜக MP தலைமேல் தொங்கும் கத்தி-நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மல்யுத்த வீராங்கனை தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு விசாரணை ஆவணங்களின் நகல்களை வழங்கக்கோரி பா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷண் சிங் தாக்கல் மனு மீது வரும் 26 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக டெல்லி மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புகாரில் தெரிவிக்கப்பட்ட தேதியில் தான் டெல்லியில் இல்லை என்பதால், அது தொடர்பான ஆவண நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என பிரிஜ் பூஷன் சிங் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவுக்கு டெல்லி காவல்துறை மற்றும் மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் பிரிஜ்புஷன் சிங் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரிஜ்புஷன் சிங் மனு வரும் 26ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பிரியங்கா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்