இந்தியா

டெல்லி வன்முறையை தூண்டியதாக எழுந்த புகார் - 4ஆம் தேதி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது, உடனடியாக எஃப் .ஐ.ஆர் பதிவு செய்ய கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை வருகிற புதன்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி

சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உடனடியாக விசாரிக்கக்கோரி மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் 'காலின் கோன்சால்வேஸ்' உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வில் முறையீடு செய்தார். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஏன் கால தாமதம் செய்ய வேண்டும் என வினா எழுப்பினார்?. அப்போது நீதிபதி, வன்முறைகள், நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டை மீறியவை, என்றும், இது போன்ற விஷயங்களை நீதிமன்றங்களால் தடுக்க முடியவில்லை என்றார். நீதிமன்றத்திற்கு அதிகார எல்லை இருப்பது போன்று நீதிபதிகளுக்கும், அழுத்தங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து தலைமை நீதிபதி, இந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் புதன்கிழமை விசாரிக்கவும் ஒப்புதல் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்