Delhi | Summer | கொளுத்தும் வெயில் | தலைநகரில் அசத்தும் `Chill பிளான்'
கோடை வெப்பத்தைத் தணிக்க டெல்லி அரசு சிறப்பு நடவடிக்கை கோடை வெப்பத்தைத் தணிக்க டெல்லி அரசு “சில் பிளான்“ chill plan எனும் அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பள்ளி மாணவர்கள் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள் வரை அனைவரையும் பாதுகாக்க பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்து நிறுத்தங்களில் குளிர்ச்சியை தரும் ‘மிஸ்டிங் சிஸ்டம்’ மற்றும் ‘ஆன்டி-ஸ்மாக்' துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் "வாட்டர் பெல்" முறையும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளின் வெப்பத்தைக் குறைக்க சிறப்புப் பிரதிபலிப்பு பூச்சுகள் பூசும் பணி சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பிரத்யேக குளிர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பறவைகள் மற்றும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மின் தேவை 9,000 மெகாவாட்டைக் கடக்கும் என்பதால், தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 1077, 1070 அல்லது 112 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது