தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், பாஜக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாவண்யா இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தி, மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பை மீறி, மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்திற்குள் நுழைய முயன்றனர். உடனே அவர்களை துணை ராணுவப்படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.