குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதியில் சில அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், லால் குயிலாவில் இருந்து சாஹித் பகத் சிங் பூங்கா வரை பேரணி செல்வதற்காக நூற்றுக்கணக்கானோர், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.