புதுடெல்லி, ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். அப்போது மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் பேசுகையில், இந்தியா பன்முக கலாச்சாரம் கொண்ட நாடுபோல, ஜே.என்.யு. பல்கலைக் கழகமும் பன்முக கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இதை அழிப்பதன் மூலம், இந்திய பன்முக கலாச்சாரத்தை அழிக்க இந்து அமைப்பினர் முயல்வதாக குற்றம் சாட்டினார். பல்கலைகழக துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே தங்களதுகோரிக்கை என்றும், அவரால், பல்கலைக் கழகத்தை சுதந்திரமாக இயக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.