இந்தியா

2ஜி மேல்முறையீடு வழக்கு - அக். 24-க்கு ஒத்திவைப்பு

2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சி.பி.ஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இதுவரை பதில் மனுத்தாக்கல் செய்யாத நபர்கள் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்