இந்தியா

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நாதிர்ஷா என்ற கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

தந்தி டிவி

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் கேங்ஸ்டர் நாதிர்ஷா சுட்டுக் கொல்லப்பட்டார் சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்

தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு வெளியே ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் கேங்ஸ்டர் நாதிர்ஷா அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரோஹித் கோதாரா என்ற கேங்ஸ்டர் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை செய்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

வெளியான சிசிடிவி காட்சிகளில் ஷா கருப்பு நிற SUV ஒன்றின் அருகில் நின்று கொண்டு மற்றொரு நபருடன் பேசுவதைக் காணலாம்.

சில வினாடிகளுக்குப் பிறகு, அந்தப் பகுதியில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த நபர் திடீர்னு என்று ஷாவை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

ஷாவை நோக்கி துப்பாக்கியால் சுடும்போதும் மற்றவர் பயத்தில் துடித்து ஓடுவதைக் காணலாம். பின்னர் தாக்குதல் நடத்திய நபர் பைக்கில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ஜிம்மிற்கு அருகில் சுமார் 10 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் சிசிடிவிகள் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நேற்று இரவு நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்