டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் "லிட்டில் மஃப்லெர்மேன்" என அழைக்கப்படும் சிறுவனும் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டெல்லி தேர்தல் முடிவு அறிவிப்பின்போது, கெஜ்ரிவாலை போன்றே தோற்றமளித்த சிறுவனின், புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டது. அந்த சிறுவனை, அனைவரும் லிட்டில் மஃப்லெர்மேன் என்று செல்லமாக அழைத்த நிலையில், கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, அவருக்கு ஆம்ஆத்மி அழைப்பு விடுத்தது. இதனைஏற்று, ராம்லீலா மைதானம் சென்ற சிறுவன், முதலமைச்சர் கெஜ்வாலை போன்ற உடை மற்றும் மூக்கு கண்ணாடி அணிந்திருந்தால், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர்.