இந்தியா

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் : நீர் திறப்பு, மேகதாது விவகாரம் - விவாதிக்க வாய்ப்பு

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 11 மணிக்கு சேவா பவனில், குழுத் தலைவர் நவீன் குமார் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. பெங்களூருவில் கடந்த ஒன்றாம் தேதி நடந்த கூட்டத்தின் போது, உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை, அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்