டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தவிர்க்க, காற்று சுத்திகரிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி லஜ்பத் நகரில் 500 மீட்டர் முதல் 750 மீட்டர் பரப்பில் உள்ள அசுத்த காற்றை உள்ளே இழுக்கும் கோபுரம், அதனுள் உள்ள வடிப்பான்கள் மூலம் காற்றை வடிகட்டி சுத்தமாக்குகிறது. 4 அடி உயர மேடையில், 20 அடி உயர கோபுரம் மூலம், காற்றை சுத்திகரிக்கும் நடவடிக்கையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.