#trivandrumairport #aarattuvizha
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ஐப்பசி திருவிழாவின் ஆறாட்டு ஊர்வலத்தையொட்டி, சர்வதேச விமான நிலையம் இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மூடாப்படுகிறது. இந்த 5 மணி நேரத்திற்கு விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து சங்கு முகம் கடற்கரைக்குச் செல்லும் ஆறாட்டு ஊர்வலம், விமான நிலைய ஓடுதளத்தைக் கடந்து செல்வதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மன்னர் காலத்தில் இருந்து தொடரும் இந்த மரபின்படி, ஆண்டுக்கு இருமுறை ஆறாட்டு ஊர்வலத்தின்போது விமான நிலையம் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.