இந்தியா

"சபரிமலை செல்ல அனுமதிக்காவிட்டால் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"- பிந்து

தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் ,கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று பிந்து என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகுப் பொடி வீசப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி என்ற அந்த பெண் நேற்று காலை வந்தபோது அங்கிருந்த ஒருவர் மிளகுப் பொடியை ஸ்பிரே மூலமாக முகத்தில் தெளித்தார். இதனால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து பிந்துவை சிகிச்சைக்காக கொச்சி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனிடையே தம்மை சபரிமலை செல்ல அனுமதிக்கவில்லை என்றால் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாக பிந்து தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்