மகாராஷ்டிரா மாநிலம் லட்டூரில், ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக வேறு ஒருவரை கொலை செய்து, தானே இறந்துவிட்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
லட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் கோபிநாத் சௌஹான், 57 லட்சம் ரூபாய் வங்கிக் கடன், குடும்பச் செலவுகள் ஆகியவற்றால் கடும் நிதிச் சுமையில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 13ம் தேதி, மதுபோதையில் லிப்ட் கேட்ட கோவிந்த் யாதவ் என்பவரை காரில் ஏற்றிச் சென்று, அவரை கொலை செய்து காருக்கு தீ வைத்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கணேஷ் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்து சிந்துதுர்க் மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், இன்சூரன்ஸ் பணத்திற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.