தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சலீம் டோலாவுக்கு மே 8 வரை காவல் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சலீம் டோலாவை மே 8ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. துருக்கியில் கைது செய்யப்பட்ட அவர், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.