இந்தியா

தர்ணா போராட்டத்தை கைவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில், கடந்த ஒரு வாரமாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில், ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும், துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந்தேதி முதல் உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். அவருடன் அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பணிக்கு திரும்பி உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதினார். இதனை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்