அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் - சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன் மொழிந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
மாநிலங்களை கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே சட்டத்தை இயற்ற வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தல். மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் விதமாக மசோதா உள்ளது என ஏற்கனவே பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.