இந்தியா

58-வது நாளாக வெகுவாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.38சதவீதமாக உள்ளது.

தந்தி டிவி

நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.38சதவீதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்து 94ஆயிரத்து 879ஆக உயர்ந்துள்ளது.

3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 44 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 894 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 15 லட்சத்து 55ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை 22 புள்ளி 78 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்