இந்தியா

மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் கடந்த 13 -ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் குஜராத்தை தாக்காமல் ஓமன் நாட்டை நோக்கி பாதை மாறி சென்றது. இந்நிலையில் மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற வாயு புயல், மீண்டும், குஜராத் மாநிலம் கட்ச் நோக்கி திரும்பும் என கண்டறியப்பட்டுள்ளது. புயல் தற்போது வலு இழந்து காணப்பட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள், குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்