கடலூரில் 1868 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1942 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயின்ற மாணவர்கள் குவிந்தனர். இப்பள்ளியில் 5,152 பேர் ஒன்றிணைந்து புதிய சாதனையை படைத்துள்ளனர். அதேப்போன்று ஓரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் தங்களது செல்லிடப்பேசியில் விளக்கினை ஒளிரச் செய்து சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் இணைந்து சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.