கேரளாவில் இறந்து கிடக்கும் காகங்கள் - அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள் 
இந்தியா

கேரளாவில் இறந்து கிடக்கும் காகங்கள் - அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த எடக்கானம் பகுதியிலும் காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா, மாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கிடக்கும் காகங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..

thanthitv

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த எடக்கானம் பகுதியிலும் காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா, மாலூர் உள்ளிட்ட பகுதிகளில் இறந்து கிடக்கும் காகங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..கண்ணூர் இரிட்டி அருகே கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்தன. பரிசோதனையில் இறந்து கிடந்த காகங்களுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எடக்கானம் என்ற இடத்தில் கிடந்த காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புத்தன்பீடிகா மாலூர் திரிகடாரிபோபகுதியில் க டந்த 2 நாட்களில் 6 காகங்கள் இறந்து கிடந்தன. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவக் குழு, இறந்த காகங்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு