கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு, மது போதையில் வந்த இளைஞர் கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஹோட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் பீதியடைந்து அலறியடித்தபடி வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு ஹோட்டலில் வாங்கிய மந்தி உணவு குறைவாக வழங்கப்பட்டதாக ஏற்பட்ட அதிருப்தியால், மது போதையில் ஹோட்டலை சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது.