இந்தியா

அதிகம் தடுப்பூசி செலுத்திய முதல் 10 மாநிலங்கள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம் 11வது இடத்தில் தொடர்கிறது

தந்தி டிவி

நாடு முழுவதும், மே 31 காலை வரை 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் போடுப்பட்டுள்ளன. 16 கோடியே 86 லட்சம் மக்களுக்கு ஒரு டோஸும், 4 கோடியே 45 லட்சம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 1 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 1 கோடியே 69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 1 கோடியே 68 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 1 கோடியே 44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 1 கோடியே 34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 1 கோடியே 8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 1 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 97 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

3 புள்ளி 6 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இதுவரை 92 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், இதுவரை 88 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்