இந்தியா

`கோவிஷீல்டை' அடுத்து `கோவாக்சின்' தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு, செயல் திறன் என்ற ஒற்றை சிந்தனையில் கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. உரிமம் பெறுவதற்காக இந்த தடுப்பூசி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்டதகாவும் கோவாக்சின் பாதுகாப்பை மத்திய சுகாதார அமைச்சகமும் மதிப்பாய்வ்வு செய்ததாகவும் கூறியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது எனவும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதம் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்