கொரோனா சிகிச்சைக்கான செலவுக்காக பணியாற்றும் நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் இதர நபர்களிடமிருந்து நிதியுதவியாக பெறப்படும் தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2091-20 ஆம் நிதியாண்டு மற்றும் பின் வருகிற ஆண்டுகளில் பெற்ற தொகைக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்திற்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பணியாற்றும் நிறுவனம் அல்லது வேறு நபர்களிடமிருந்து நிவாரணமாக பெறப்படுகின்ற தொகைக்கு இந்த வரி விலக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது,. பணியாற்றும் நிறுவனமாக இருந்தால் நிவாரண தொகைக்கு உச்சவரம்பு இல்லை எனவும் ஆனால் மற்ற நபர்களிடமிருந்து தரப்படும் நிவாரண தொகைக்கு அதிகபட்சமாக ரூபாய் 10 லட்சம் ரூபாய் வரையிலான நிவாரண தொகைக்கு வருமான வரி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.