இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் , மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், கர்ப்பிணி பெண்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு அவை சோதனை மையத்திற்கு அனுப்பப்படும். மாநில அரசுகள் இதனை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.