இந்தியா

கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது" - கேரளா எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுகாஷ் கூறுகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பினால், இதுவரை 19 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், எர்ணாகுளத்தில் 32 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். 532 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆலுவாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவனும், அவனது தாயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். வைரஸ் பாதித்த நாடுகளிலிருந்து கொச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொரோனாவுக்கு என தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருப்பத்துரை ஆயுர்வேத மருத்துவமனையில் 80 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்