இந்தியா

நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த , மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுவது நல்லது என்றும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். மார்ச் 18 ஆம் தேதி முதல் ஐரோப்பிய யூனியன், துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு