டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்கி வருவதாக கூறினார். இதனிடையே, இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3-வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இத்தாலியிலிருந்து 3-வயது குழந்தையுடன் வந்த தம்பதியினர் கேரள விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். சோதனையில், அந்தக் குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குழந்தை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எர்ணாகுளத்தில், 12 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், தீவிர கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.