இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மற்றும் அவர்களது உறவினர் இருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால் பத்தணந்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் சைலாஜா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பத்தணந்திட்டா மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டு நடைபெறும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சைலஜா கூறினார்.