இந்தியா

கொரோனா தடுப்பூசி திட்டம்... போலியோ போல செயல்படுத்த வேண்டும் - டெல்லி துணை முதல்வர்

போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டெல்லி துணை முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசி திட்டம்... போலியோ போல செயல்படுத்த வேண்டும் - டெல்லி துணை முதல்வர்

போலியோ திட்டத்தை போல கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டெல்லி துணை முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய அரசு மார்ச் மாதத்தில் எடுத்திருந்தால், நாட்டில் 6.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளர்.கொரோனா தடுப்பூசிகளை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மத்திய அரசு பெரும் தவறை செய்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்கு சர்வதேச நாடுகளின் உறவு காரணமாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் ஏன் தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஒவ்வொரு மாநிலமும் , தனக்கு தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்கு சர்வதேச டெண்டர்களை கோருமானால், இந்தியாவின் மதிப்பு என்னாவது? என்றும், இந்திய ஒன்றிய அரசின் பங்கு தான் என்ன? என்றும் சிசோடிய கேள்வி எழுப்பியுள்ளார்.கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது தோல்வியை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்