இந்தியா

அறிகுறி இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் - மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு

கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் அறிகுறி இருந்தால் அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

அதில், ரேபிட் கிட் பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆர்டி-பிசிஆர் மூலம் சோதனை செய்து பாஸிட்டிவ் எதுவும் இல்லை என

உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பாசிட்டிவ் நோயாளிகளை தவறவிடவில்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. சோதனையில் தவறான நெகட்டிவை கண்டறிந்து தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கண்டறிய வேண்டும் எனவும் ரேபிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து, கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்