2021 ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியதாக லான்செட் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் வெறும் 4 லட்சத்து 89 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கை இதை விட 8 மடங்கு அதிகம் என்றும், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை இந்தியாவில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் 40 லட்சத்துக்கு அதிகம் என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில்
13 லட்சம் பேரும், ரஷ்யாவில் 10 லட்சம் பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கொரோனா மற்றும் கொரோனா தொடர்புடைய மரணங்கள், இறப்பு விகிதங்களை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வெறும் 59 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்து. ஆனால் தங்களின் ஆய்வு படி, உலகளவில் ஒரு கோடியே 8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என லான்செட் ஆய்வு கூறுகிறது.
இதில் குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா , பீகார் உள்ளிட்ட் மாநிலங்களில் பதிவான இறப்பு எண்ணிக்கை ஒமிக்ரான் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் பதிவான உயிரிழப்புகளை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் உண்மையான பாதிப்பு மூடி மறைக்கப்படுகின்றதா என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.