இந்தியா

2 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் தொடந்து 5-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் தொடந்து 5-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரங்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 827 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர் என்றும் 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 14 கோடியே 52 லட்சத்து 71 ஆயிரத்து 186 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்