இந்தியா

இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளது.

தந்தி டிவி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்தது, 80 லட்சத்து 40 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இதுவரை 73 லட்சத்து 15 ஆயிரத்து 989 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது நாடு முழுவதும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து

20 ஆயிரத்து 527 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 90 பள்ளி 99 ஆகவும், இறப்பு சதவீதம் 1 புள்ளி 50 ஆகவும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 49 ஆயிரத்து 881 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 ஆயிரத்து 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு 517 பேர் உயிரிழந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்