இந்தியா

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு.. முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோஷம்

தந்தி டிவி

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நிதிஷ்குமார், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெண்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தேசிய மகளிர் ஆணையம், பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பீகார் சட்டசபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதனால் பீகார் சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

Crime தமிழகத்தை குலைநடுங்க விட்ட மனித கறி பிரியாணி - `மிருகமாக’ மாறிய தம்பதிக்கு இறங்கிய இடி

Delhi CJP Protest | Abhijeet Dipke Arrest | ப்ளைட்டுக்குள் வைத்தே அபிஜித் தீப்கே கைது

Cuddalore | Crime | வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் பின்னணி

TN Govt | TVK | Byelection Results | `மீண்டும்’ - செங்கல்பட்டு திருப்பூர் மக்களே கொண்டாடுங்க போங்க..

Breaking | Anbumani | ``தவெக கூட்டணியில் பாமகவா?'' | உடைத்து பேசிய அன்புமணி