இந்தியா

நிர்வாணமாக்கி தொடர் துன்புறுத்தல்... அநியாயமாக பலியான உயிர்..! உயிரை குடித்த கொடூர மந்திரவாதி

தந்தி டிவி

நிர்வாண பூஜையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் சென்னூர் நகரை சேர்ந்தவர் தாசரிமது. பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு, உடலில் தீய சக்தி இருப்பதாகவும் அதை வெளியேற்றினால் உடல்நிலை சரியாகும் எனவும் சாமியார் ஒருவர் கூறியுள்ளார். அதனை நம்பிய தாசரிமது குடும்பத்தார், அவருக்கு மாந்திரீக பூஜை செய்ய ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து கோதாவரி ஆற்றின் அருகே, அவரை அடித்து துன்புறுத்தி நிர்வாண பூஜை செய்ததாக தெரிகிறது. இதில் தாசரிமது இறந்துவிடவே, யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்த போலிச் சாமியார் திட்டமிட்டுள்ளார். இதனை தாசரிமதுவின் உறவினர் ஒருவர் ரகசியமாக படம் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து உடலை மீட்ட போலீசார், போலிச் சாமியாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது