இந்தியா

Content Creators | இன்ஃப்ளூயன்சர்ஸ், கன்டென்ட் கிரியேட்டர்ஸ்க்கு இனி அதிகமா காசு கொட்ட போகுது

இன்ஃப்ளூயன்சர்ஸ், கன்டென்ட் கிரியேட்டர்ஸ்க்கு இனி அதிகமா காசு கொட்ட போகுது

thanthitv

சமூக ஊடக வருவாயில் நேர்மையான வருவாய் பகிர்வு அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி சமூக ஊடக நிறுவனங்கள் தங்களின் வருவாயை, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய அவர், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் தகவல்களை உருவாக்குபவர்களுக்கு வருவாயில் உரிய பங்களிப்பை வழங்க புதிய நடைமுறை அவசியம் என்று வலியுறுத்தினார். அனுமதி இன்றி ஒருவரின் முகம் அல்லது குரலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Deepfake தகவல்கள், சமூக கட்டமைப்பையே சிதைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடகத் தளங்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரின் பேச்சு, விரைவில் சமூக ஊடகங்களுக்கான புதிய வருவாய் பகிர்வு மற்றும் AI ஒழுங்குமுறை விதிகள் வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

DMK | DMDK Premalatha | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என பிரேமலதா பேச்சு

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம்