ராகுல் உள்ளிட்டோர் சென்ற பேருந்து தடுத்து நிறுத்தம் - பரபரப்பு டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக, காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு பேருந்தில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்களுடன் பேரணியாகச் சென்று காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர்.