இந்தியா

பற்றி எரியும் MLAக்களின் வீடு.. கருகும் தேசியவாத காங்கிரஸ் அலுவலகம் -என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்டோபர் 24ஆம் தேதிக்குள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கெடு விதித்திருந்தனர். கெடு முடிந்ததை அடுத்து, மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், Beed மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு போராட்டக்கார‌ர்கள் தீ வைத்தனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சந்திப் சீர்சாகர் மற்றும் மாநில முன்னாள் அமைச்சர் ஜெய் சீர்சாகர் ஆகியோரின் வீடுகளிலும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டிலும் தீ வைத்த‌து குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்