கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் பாஜகவை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த அவர், மேலும் பேசுகையில், அமித்ஷா தன்னால் முடிந்தவரை இந்த அரசை கவிழ்க்க முயற்சித்தார் எனவும், கர்நாடக அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் அவருக்கு பிற வியாதிகளும் வந்து சேரும் எனவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் அமித்ஷா ஈடுபடாமல் இருந்தால் நன்மைகள் கிடைக்கம் எனவும் அவர் தெரிவித்திருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.