இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டல் செக்டரில் நடத்தப்பட்டதாக கூறினார்.இது தவிர, 2011, 2013, 2014 ஆம் ஆண்டுகளிலும் சர்ஜிகல் ஸ்ட்டிரைக் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆறு முறை சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியும் அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அதனை பயன்படுத்தவில்லை என்றும், ஆனால் பாஜக அரசு, ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி விட்டு, அதை அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக ராஜீவ் சுக்லா குற்றஞ்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்