இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமித்து உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமித்து, உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை நியமிப்பதில் உள்ள கால தாமதத்தால் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக பல காங்கிரஸ் முன்னோடி தலைவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்லும் நிலையில், அதனை தடுத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அம்மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கு, மேலிட தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து வரும் நிலையில், அதனை தடுக்க பிரதேச மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி அதன் மூலம் கட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் சசிதரூர் வலியுறுத்தி உள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்